புதுடில்லி: சஞ்சு சாம்ஸன் கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட  சர்வதேச டி20 அணியில் சேர்க்கப்படாததற்கு ட்விட்டரில் ஒரு ஸ்மைலியை பதிவிட்டிருந்தார்.  அதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் தேர்வுக் குழுவின் மீது தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

வரும் டிசம்பர் 6 ஆம் தேதி துவங்கவுள்ள மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிரான சர்வதேச டி20 போட்டியில் விளையாடவுள்ள வீரர்களை தேர்வுக் குழு வெளியிட்டது. ஆனால், அந்த பட்டியலில் சஞ்சு சாம்ஸன் தவிர்க்கப்பட்டு இருந்தார்.

இதைப்பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வார்த்தைகளால் எதுவும் கூறாது ஸ்மைலியை பதிவிட்டிருந்தார். ஆனால், அவரது ரசிகர்கள் தங்கள் கோபத்தை “இது நியாயமே இல்லை. வாய்ப்பே தராமல் எப்படி அவர்கள் அணியிலிருந்து நீக்கலாம் “ என ஒருவர் கூறியுள்ளனர்.

“அணியில் இடம் பிடிக்க உனக்கு அத்தனைத் திறமைகளும் உண்டு. கடவுளிடம் நம்பிக்கை வை. உனக்கான வாய்ப்பு வரும் போது உனது மட்டையைக் கொண்டு உன்னை கீழே தள்ள முயல்பவர்களுக்கு பதில் சொல்”, என்று இன்னொருவர் கூறியுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த வீரரான இவர் ஐபிஎல் லில் 93 போட்டிகளில் விளையாடி 2209 ஓட்டங்களை எடுத்த ஒரு சாதனைப் பதிவைக் கொண்டுள்ளார். இதில் பத்து அரை சதங்களும் இரண்டு சதங்களும் அடங்கும்.

மேலும், தென் ஆபிரிக்காவுக்கெதிராக 2019 விஜய் ஹஸாரே போட்டிகளில் இவர் இரட்டை சதங்கள் அடித்துள்ளார். இது இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இவரது பெரிய சாதனையாகும்