மே.இ. தீவுகள் தொடர்: ஷிகர் தவானுக்குப் பதில் சஞ்சு சாம்சன் சேர்ப்பு

கொல்கத்தா:

மேற்கு இந்திய தீவுக்கு எதிரான தொடர் கொல்கத்தாவில் நடைபெற்று வரும் நிலையில், ஆட்டத்தின் போது காயம் அடைந்த ஷிகர் தவானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டு உள்ளதாக பிசிசிஐ தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும்  மே.இ.தீவுகள் அணி,  தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர்களில் பங்குபெறும் வீரர்கள் குறித்து  இந்திய அணி சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில்,  இந்திய டி20 அணியில் இடம்பெற்ற ஷிகர் தவன், காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகியுள்ளார். இதையடுத்து, அவருக்கு பதிலாக  விக்கெட் கீப்பர் – பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்டில் விக்கெட் கீப்பர் சஹாவுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. வலது கை விரவில் அவருக்கு எலும்புமுறிவு ஏற்பட்டதால் அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். மும்பையில் அவருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடைபெற்றதாக பிசிசிஐ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.