சாதி ஒழிப்பு போராளி கவுசல்யாவை எதிர்க்கும் சங்கரின் கிராம மக்கள்

டுமலைபேட்டை

சாதி எதிர்ப்பு போராளி கவுசல்யாவை எதிர்த்து அவருடைய முன்னாள் கணவரின் கிராம மக்கள் தீர்மானம் இயற்றி உள்ளனர்.

 

உடுமலைப்பேட்டை அருகில் உள்ள குமாரலிங்கம் என்னும் கிராமத்தை சேர்ந்த தலித் இளைஞர் சங்கர் என்பவர் ஆதிக்க சாதியை சேர்ந்த கவுசல்யா என்னும் பெண்ணை கலப்பு திருமணம் செய்துக் கொண்டார்.   அதனால் கவுசல்யாவின் பெற்றோர்களும் உறவினர்களும் சங்கரை கவுசல்யாவின் கண் முன்பே வெட்டிக் கொன்றனர்.    அதை ஒட்டி கவுசல்யாவின் தந்தைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சங்கர் – கவுசல்யா திருமணம்

அதன் பிறகு சங்கரின் கிராமத்தில் தங்கி சாதி ஒழிப்பு போராளியாக பணிபுரிந்து வந்தார்.  சமீபத்தில் பறை இசை கலைஞரான சக்தி என்பவரை கவுசல்யா மறுமணம் செய்துக் கொண்டார்.   சக்தியும் கவுசல்யாவும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி – கவுசல்யா திருமணம்

இந்த நிகழ்வு குமாரலிங்கம் கிராம மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.   அந்த கிராம மக்கள் ஒன்று கூடி கவுசல்யாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.   அந்த தீர்மானத்தில் ”கவுசல்யா எங்கள் கிராமத்தில் வசித்து சாதி ஒழிப்புக்காக போராடியும் சங்கரின் பெற்றோரை கவனித்து வந்ததும் மிகவும் வரவேற்பை அளித்துள்ளது.

ஆனால் அவருடைய சமீபகால நடவடிக்கைகளால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.   ஆகவே அவரை எதிர்த்து இந்த தீர்மானம் இயற்றப் படுகிறது.   இனி அவர் இந்த கிராமத்தில் வசிக்கக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.    அவருடைய சமீப கால நடவடிக்கைகளால் சாதி ஒழிப்பு என்பதை அவர் மறந்து விட்டதாக தெரிய வந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தின் ஒரு நகல் காவல்துறைக்கும் அரசுக்கும் அனுப்பப் பட்டுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

உடுமலைப்பேட்டை காவல்துறை துணை சூப்பிரண்ட் தமக்கு இது போல எந்த ஒரு கடிதமும் கிராம மக்களிடம் இருந்து வரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.   அந்த கடிதம் கிடைத்தால் அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கபடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.