பருவநிலை மாற்றத்தைவிட சம்ஸ்கிருத ஆராய்ச்சிக்கு அதிக பணம்

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒரியா மற்றும் சமஸ்கிருதம் என 6 செம்மொழிகள் இருந்தாலும் மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு தரும் முன்னுரிமை ஏன் என்றே புரியாத புதிராக உள்ளது.

சமஸ்கிருதம் இந்தியாவில் மொத்தம் 24,000 பேர்கள் மட்டுமே பேச்சுவழக்காக கொண்ட ஒரு மொழி, இதற்கு மத்திய அரசு கடந்த மூன்றாண்டுகளில் 643 கோடி ருபாய் சமஸ்கிரத மொழி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக செலவிட்டிருக்கிறது.

ராஷ்டிரிய சான்ஸ்கிரிட் சன்ஸ்தான் எனும் டெல்லியில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு சமஸ்கிருத மொழி ஆராய்ச்சிக்காக இந்த தொகையை வழங்கி இருக்கிறது மத்திய அரசு.

தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னடத்திருக்கு 29 கோடி ருபாய் ஒதுக்கிய நிலையில், மலையாளம் மற்றும் ஒரியா-விற்கு இதுவரை எந்த ஒரு குழுவும் அமைக்கவில்லை.

செலவு செய்திருக்க கூடிய தொகையை வைத்து பார்க்கும் பொழுது சமஸ்கிருதம் பேசுவோருக்கு நபர் ஒருவருக்கு தலா ரூ. 93,126, தமிழுக்கு ரூ. 1.13 கன்னடத்துக்கு 24 பைசா தெலுங்குக்கு 13 பைசா வீதம் செலவு செய்திருப்பது தெரியவருகிறது.

ஆனால் வருத்தப்படும் விஷயமாக சுற்றுசூழலை பாதுகாக்க 533 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது சமஸ்கிருத மொழி ஆராய்ச்சியை விட முக்கியமானதாக தெரியவில்லை போலும்.

செம்மொழிகள் மற்றவற்றிக்கு தரப்படாத முன்னுரிமையும் சுற்றுசூழலுக்கு கிடைக்காத முக்கியத்துவமும், சமஸ்கிருதத்திற்கு மட்டும் அளிக்கப்படுவது ஏன் ?