சந்தானம் ஹீரோவாக நடித்து இந்த ஆண்டு வெளிவந்த ‘தில்லுக்கு துட்டு’ மற்றும் ‘ஏ1’ வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ‘ஓடி ஓடி உழைக்கணும்’, ‘டகால்டி’, ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கார்த்திக் யோகி இயக்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இதன் டைட்டில் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.