ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்திலேயே ‘பாரிஸ் ஜெயராஜ்’ படத்தின் டப்பிங் பணி ஆரம்பித்த சந்தானம்…!

சந்தானம் நடிக்கும் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இந்த படத்தை A1 புகழ் ஜான்சன் இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஆர்துர் வில்சன் ஒளிப்பதிவு, துரை ராஜ் கலை இயக்கம், பிரகாஷ் படத்தொகுப்பு மேற்கொள்கின்றனர். கே. குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை நேற்று துவங்கியுள்ளார் சந்தானம். படப்பிடிப்பு ஒரு புறம் நடைபெற்று வருகிறதுதாம், தான் நடித்த காட்சிகள் வரை டப்பிங் செய்து வருகிறார் சந்தானம்.

சந்தானம் போகின்ற வேகத்தை பார்த்தால் பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் டீஸர் அல்லது ட்ரைலரை எதிர்பார்க்கலாம் என்ற ஆவலில் உள்ளனர் சந்தானம் ரசிகர்கள்.