பல்கலைக்கழக பதிவாளரிடம் சந்தானம் குழு விசாரணை

மதுரை:

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக சந்தானம் குழு விசாரணை நடத்தி வருகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பதிவாளர் சின்னையாவிடம் சந்தானம் விசாரணை நடத்தினர். முன்னதாக, பல்கலை மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் கலைசெல்வனிடம் விசாரணை நடந்தது.

இவர் நிர்மலா தேவிக்கு பயிற்சி அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.