சந்தானத்திற்கு ஜோடியான மராத்தி நடிகை

இயக்குனர் செல்வராகவன் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்கிவருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. மராத்தி நடிகையான அதிதி பொஹன்கர் சந்தானத்திற்கு ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார். மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

செல்வராகவன் – சந்தானம் கூட்டணியில் ரொமாண்டிக் காமெடியாக இப்படம் உருவாகிறது.