நடிகர் சந்தானம் மீண்டும் ‘A1’ படத்தின் இயக்குனர் கே ஜான்சன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

தற்போது அந்தப் பட வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். காவியத் தலைவன், செம போத ஆகாதே படங்களில் நடித்த அனைகா சோதி என்பவர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இந்தப் படம் கேங்ஸ்டர் படமாக உருவாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘பாரிஸ் ஜெயராஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சந்தானம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.