இறுதி ஊர்வலத்தில் நண்பர் சேதுராமனின் உடலைச் சுமந்து சென்ற மரியாதை செலுத்திய சந்தானம்…!

கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சேதுராமன் மார்ச் 26 அன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 37.

நடிகராக மட்டுமன்றி, தோல் சிகிச்சை மருத்துவராகவும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலம். இவரது திடீர் மறைவு பிரபலங்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் சேதுராமனின் நெருங்கிய நண்பரான நடிகர் சந்தானம் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு கண்ணீருடன் சேதுராமனின் உடலைச் சுமந்து சென்று இறுதி மரியாதை செலுத்தினார். அதற்கான வீடியோ சமூகவலைதளங்களிலும் இணையத்திலும் வைரலாகிறது.