‘நாங்க ஆச்சாரமானவங்க..நீங்க? கலக்கும் சந்தானத்தின் ‘A1’ டீசர்…!

 

அறிமுக இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் ’A1′ திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. இத்திரைப்படத்தின் டீசர் இன்று வெளியானது.

சந்தோஷ் நாரயணன் இசையக்கும் இப்படத்தை கோபி ஜகதேஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை தாரா அலிஸா பெரி சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர், மீரா கிருஷ்ணன், சாய்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் மாதத்தில் வெளியானது. தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில், ராஜ் நாராயணன் தயாரிக்கும் இந்தப் படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: A1, Santhanam, teaser
-=-