பிரதமர் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்த சாந்தனு….!

கொரோனா வைரஸ் பரவும் வேகம் இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸுக்கு 500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரதமர் மோடி நேற்று (மார்ச் 24) நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.அதில், “அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இதற்கு மக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த முடிவுக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் வரவேற்பு தெரிவித்து, தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இதற்கு ஆதரவு தெரிவித்த சாந்தனு: 67 நாட்களில் 1 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அடுத்த 11 நாளில் 2 லட்சம், அடுத்த 4 நாட்களில் 3 லட்சம் பேர். கரோனாவைத் தடுக்க நமது பிரதமரின் அற்புதமான திட்டம் இது. இதுதான் நமக்குக் கிடைக்கும் ஒரே வழி. கோவிட்-19 பாதிப்பிலிருந்து மீளத் தீவிரமான ஒரு மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது 21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது என பதிவிட்டுள்ளார் .