மலையாளத்துக்கு செல்லும் சந்தோஷ்..

மலையாளத்துக்கு செல்லும் சந்தோஷ்..

முதன் முறையாக சந்தோஷ் நாராயணன், மலையாளப்படத்துக்கு இசை அமைக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

டோவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குநர் டார்வின் குரியகோஸ் டைரக்டு செய்கிறார்.

சந்தோஷ் நாராயணனுக்கு இந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது?

அவரது மலையாள படத்துக்கு ஸ்கிரிப்ட் எழுதியுள்ள ஜினு ஆப்ரஹாம் தான், முதலில் சந்தோஷை அணுகியுள்ளார்.

‘’ இந்த படத்துக்கு வித்தியாசமான இசை தேவைப்பட்டது. சந்தோஷ் பொருத்தமாக இருப்பார் என தோன்றியது,கதையை சொன்னோம். ஸ்கிரிப்டை கேட்டதும் உடனடியாக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்’’ என்கிறார், ஆப்ரஹாம்.

அடுத்த ஆண்டு மத்தியில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது.
-பா.பாரதி.