மோகன்லால் இயக்கவுள்ள ‘பரோஸ்’ படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இயக்குநர் ஜிஜோ ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘பரோஸ் –கார்டியன் ஆஃப் டி-காமாஸ் ட்ரெஷர்’ என்னும் போர்த்துக்கீசியர்கள் குறித்த கதையைத் தான் மோகன்லால் இயக்கவுள்ளார்.
இந்தக் கதையில் ஸ்பெனீஷ் நடிகர்களுடன் இணைந்து, பரோஸ் கதாபாத்திரத்தில் மோகன்லால் நடிக்கவுள்ளார். முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவன் ஒப்பந்தமாகியுள்ளார்.


இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார் லிடியன் நாதஸ்வரம். மோகன்லால் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2021-ல் தொடங்கும் எனத் தெரிகிறது.