பிரபல நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர்…!

கேதர்நாத் மற்றும் சிம்பா போன்ற படங்கள் மெஹா ஹிட்டை கொடுத்து நம்பர் ஒன் நடிகையாக பாலிவுட்டில் வளம் வருபவர் பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கான்.

இந்த நிலையில் நேற்று சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி முடித்து விட்டு வெளியே வந்தபோது அவர்களின் ரசிகர்கள் அவரை முற்றுகையிட்டனர். பின் ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க சாரா அலி கான் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்ட்டிருந்தார்.

அப்போது ஒரு ரசிகர் திடீரென சாரா அலிகானின் கையை பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார்.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.