ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான இந்திப் படம் ‘ராஞ்சனா’.அதற்குப் பிறகு ‘ஷமிதாப்’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகும் ‘அத்ரங்கி ரே’ இந்திப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இதில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் ஆகியோருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் தொடங்கவே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

‘அத்ரங்கி ரே’ படத்தை டி-சீரிஸ் நிறுவனம் வழங்க கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் கலர் யெல்லோ நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் டிம்பிள் ஹயாதி நடிப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், இந்த படத்திலும் தனுஷ் 6 பேக் கொண்டு காட்சியளிக்கிறாரா என்ற ஆர்வத்தில் உள்ளனர்.