சாரா அலி கான் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘அட்ரங்கி ரே’…!

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் , தனுஷ் நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘அத்ரங்கி ரே’ . இந்தப் படத்தில் தனுஷுடன் சாரா அலி கான் மற்றும் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

படத்தில் அக்‌ஷய் குமார் கெஸ்ட் ரோலில் மட்டுமே வருவார் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று இயக்குனர் தெளிவுபடுத்தியுள்ளார்.

சாரா அலி கான் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். அக்‌ஷய் குமார் மற்றும் தனுஷ் ஆகியோரை காதலிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது .

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சில தினங்களுக்கு முன் வெளியானது , அதில் தனுஷ் மற்றும் அக்‌ஷய் குமார் இருவரும் ஒரே நேரத்தில் சாரா அலிகானுக்கு முத்தம் கொடுப்பது போன்று அதில் இருந்தது. இந்த பர்ஸ்ட் லுக் படத்தின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.