கேரள வெள்ள நிவாரண நிதிக்கு சரத் பவார் ரூ. 1 கோடி

மும்பை

கேரள வெள்ள நிவாரண நிதிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ரூ. 1 கோடி நிதி உதவி அளித்துள்ளார்.

கேரளாவில் வரலாறு காணாத வெள்ளத்தால் சுமார் 350க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்துள்ளனர்.   லட்சக்கணக்கானோர் வீடு உள்ளிட்டவற்றை இழந்து மீட்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.   தற்போது மழை நின்றுள்ளதால் மீட்புப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

அனைத்து அரசியல் கட்சிகளும்  பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவியை நிவாரண நிதியாகவோ அல்லது நிவாரணப் பொருட்களாகவோ கேரள மக்களுக்கு அளித்து வருகின்றனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரூ. 1 கோடி நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது.   அந்த கட்சியின் தலைவர் சரத் பவார் இதை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.