சேலஞ்சர்ஸ் பிளஸ் டேபிள் டென்னிஸ் – இந்தியாவின் சரத் கமலுக்கு தங்கம்!

தோஹா: ஓமன் நாட்டில் நடைபெற்ற சர்வதேச சேலஞ்சர்ஸ் பிளஸ் டேபிள் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார் இந்தியாவின் அஜந்தா சரத் கமல்.

அரையிறுதிப் போட்டியில் ரஷ்யாவின் கிரில் ஸ்காச்கோவை 4-3 என்ற கணக்கில் கடினமாகப் போராடி வென்ற இவர், இறுதிக்குள் நுழைந்தார்.

இறுதிப் போட்டியில், போர்ச்சுகல் நாட்டின் மார்கோஸ் பிரீடாஸை எதிர்த்து விளையாடி, 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

அதேசமயம், ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் தோற்றுப்போன இந்தியாவின் ஹர்மீத் தேசாய்க்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மேலும், ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் தோல்வியை சந்தித்த இந்தியாவின் அஜந்தா சரத் கமல், ஹர்மீத் தேசாய், மனவ் தாக்கர் மற்றம் மானுஷ் ஷா இணைகளுக்கு தலா 1 வெண்கலப் பதக்கம் கிடைத்தது.