மலையாள ரீ-மேக் படத்துக்காகச் சரத்துடன் இணையும் சசிகுமார்.

மலையாள ரீ-மேக் படத்துக்காகச் சரத்துடன் இணையும் சசிகுமார்.

சரத்குமாரும் சசிகுமாரும் முதன் முறையாக இணைந்து நடிக்க உள்ளனர்.

சாச்சி இயக்கி மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற திரைப்படம்- ’’அய்யப்பனும், கோஷியும்’.

பிருத்விராஜும்,பிஜு மேனனும் இந்த படத்தில் இரட்டை ஹீரோக்களாக நடித்து இருந்தனர்.

ஆடுகளம் படத்தைத் தயாரித்த கதிரேசன், இந்த படத்தைத் தமிழில் ரீ-மேக செய்யும் உரிமையை விலைக்கு வாங்கியுள்ளார்.

தனுஷை ஹீரோவாக வைத்து , இந்த படத்தைத் தயாரிப்பதாக இருந்தார், கதிரேசன்.

நேரம் வாய்க்கவில்லை.

அந்த படத்தின் தமிழ் ரீ-மேக்கில் சசிகுமாரும், சரத்குமாரும் இணைந்து நடிக்க உள்ளனர்.

இரண்டு குமார்களும் சேர்ந்து நடிப்பது இதுவே முதன் முறை.

சரத்குமார், இப்போது மணிரத்னம் இயக்கும் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்து வருகிறார்.

சசிகுமார் கையில் கொம்பு முளைத்த சிங்கமடா, ராஜவம்சம், எம்.ஜி.ஆர்.மகன் ஆகிய படங்கள் உள்ளன.

– ஏழுமலை வெங்கடேசன்