தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரில் ஒருவர் சரத்குமார்.
நேற்று (ஜூலை 14) சரத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளத்தில் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர் .


அந்த வகையில் ராதிகா சரத்குமார் ‘Bird of Prey – The Hunt Begins’ என்ற போஸ்டரை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு “இந்த நல்ல நாளில் உங்களை ஓடிடி உலகத்துக்கு வரவேற்கிறேன். பிறந்த நாள் வாழ்த்துகள் சரத்” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஓடிடி தளத்தில் சரத்குமார் அறிமுகமாகவுள்ளது உறுதியாகியுள்ளது.
மேலும், இந்த வெப் சீரிஸ் அர்ச்சனா என்பவர் எழுதிய ‘Birds of Prey’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.