நில மோசடி சரத்குமார், ராதாரவி மீது வழக்கு தொடுக்க நடிகர் சங்கம் தீர்மானம்..!

sarath-radharavi-long

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இன்னும் சில நாட்களில் சென்னை லையோலா கல்லூரியில் நடைப்பெறவுள்ளது, இதனால் அங்கு எடுக்கப்படும் தீர்மானத்தை பற்றி கலந்து போச இன்று சென்னை தி.நகர் நடிகர் சங்கத்தில் செயற்க்குழு கூடியது இதில் ஜந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில் முக்கியமாக இரண்டு தீர்மானங்கள் நடிகர் சங்கத்தின் முன்னால் தலைவராக இருந்த சரத்குமாருக்கும் செயளாளராக இருந்த ராதாரவிக்கும் அதிர்ச்சியளிக்கும் தீர்மானமாக அமைந்துள்ளது. செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானம் பின்வறுமாரு…

தாம்பரத்தை அடுத்துள்ள வெங்கடாபுரத்தில் உள்ள நடிகர் சங்கத்துக்கு சொந்தமான 26 சென்ட் நிலத்தை முறைகேடாக விற்பனை செய்த நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, உள்ளிட்டோர் மீது சென்னை காவல் ஆணையரிடம் கிரிமினல் புகார் கொடுக்க தீர்மானம் நிறைவேற்றம்,

லயேலா கல்லூரியில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் நடத்த அனுமதி வழங்க கூடாது என லயேலா கல்லூரிக்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பிய நடிகர் சங்க உறுப்பினரும், ராதாரவியின் உறவினருமான பிரபாகரன் மீது சங்கத்தின் மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட ஐந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.