சென்னை

மிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்களை 20% உறுப்பினர்களுடன் இயக்க அனுமதி அளிக்க  அரசுக்கு ச ம க தலைவர் சரத்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா அச்சம் காரணமாக மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.   இவற்றில் உடற்பயிற்சி நிலையங்களும் ஒன்றாகும்.  இதனால் இங்குப் பணி புரிவோர் பணிகளை இழந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

தற்போதைய ஊரடங்கு தளவில் பல நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.   அவ்வகையில் ஐடி நிறுவனங்கள்50% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.   ஆனால் உடற்பயிற்சி நிலையங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ”தமிழக அரசு ஐடி நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளித்துள்ளது.  இதைப்போல் உடற்பயிற்சி நிறுவனங்கள் திறக்கப்பட்டு 20% உறுப்பினர்களுடன் இயங்க அனுமதி அளிக்கலாம்.

பெரும்பாலான உடற்பயிற்சி நிறுவனங்கள் உபகரணங்களை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.  இங்குப் பணி புரியும் ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  இதைத் தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்” என் கேட்டுக் கொண்டுள்ளார்.