மகள் வரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கும் சரத்குமார்…!

சரத்குமாரின் மகளான வரலட்சுமி, ஹீரோயினாக மட்டுமல்லாமல் வில்லியாகவும் நடித்து தன் திறமையை வெளிக்காட்டி வருகிறார். தமிழ், மலையாளம் , கன்னடம் என பிற மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

’டேனி’ படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் வரலட்சுமி, தற்போது ராதிகா மற்றும் சரத்குமார் இணைந்து நடிக்கும் ‘பிறந்தநாள் பராசக்தி’ படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் வரலட்சுமி நடிப்பது குறித்து பேசிய சரத்குமார், “வரலட்சுமி சிம்புவுக்கு ஜோடியாக ‘போடா போடி’ படத்தில் நடித்திருந்தார். அந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு, காலதாமதமாக வெளியானது. அந்த சமயத்தில் நான் மற்ற இயக்குநர்களிடம் பேசி வரலட்சுமிக்கு வாய்ப்பு பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும். அப்படி செய்யாமல் இருந்ததற்கு தற்போது நான் வருந்துகிறேன். அதற்கு இப்போது வரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.