படப்பிடிப்பு தளத்திற்கு சென்று வரலட்சுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சரத்குமார்…!

கே.வீரக்குமார் இயக்கத்தில் ஆக்‌ஷன் திரில்லர் படமாக உருவாகி வரும் சேஸிங் படத்தில் நடித்து வருகிறார் வரலட்சுமி.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், வரலட்சுமி கயிறு பயன்படுத்தாமல், டூப் ஏதுமில்லாமல் சண்டை போடும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்தார் வரலட்சுமி. இந்த ஸ்டண்ட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகரும், வரலட்சுமியின் தந்தையுமான சரத்குமார் சென்று வரலட்சுமியின் சண்டைக் காட்சியை பாராட்டியதும் மட்டுமில்லாமல், படக்குழுவினரையும் பாராட்டியிருக்கிறார். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chasing, sharath kumar, varalakshmi
-=-