காவல் நிலையத்தில் விசாரணை கைதி தற்கொலை முயற்சி!

சென்னை,

சென்னை திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

சரவணன் என்ற இளைஞரை திருவிக.நகர் கே-9 போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு  அவரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. இந்நிலையில், காவல் நிலைத்திலேயே சரவணன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதையடுத்து அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காவலர் சிகிச்சை அளித்ததாகவும், தற்போது சரவணன் நலமுடன் காவல் நிலையத்தில் இருப்பதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது,

கொலை மற்றும் செயின்பறிப்பு வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபர் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டதாகவும், ஆனால் காவல் நிலையத்தில், டியுப் லைட்டை உடைத்து, அதன் சிறிய துண்டின் மூலம் தனக்குத்தானே கழுத்தில் கீறிக்கொண்டதாக கூறி உள்ளனர்.

கடந்த 19ந்தே  தேதி K-9 திரு.வி.க நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரு.வி.க நகர், கோபாலபுரம் சந்திப்பில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்த சரவணன் (24) (த/பெ, பழனி, எண்-14/32, காமராஜர் நகர் 7வது தெரு, திரு.வி.க நகர், சென்னை) என்பவரை வாகன சோதனையின் போது போலீஸார் பிடித்து விசாரணை செய்ததாகவும், அப்போது  சரவணன் தான் செய்த செயின் பறிப்பு குற்றத்தை ஒப்பக்கொண்டார்.

அவர் மீது M-1 மாதவரம் மற்றும் தூத்துக்குடி காவல் நிலைய சரகங்களில் கொலை வழக்குகளும், வளசரவாக்கம் காவல் நிலைய சரகத்தில் 17 செயின் பறிப்பு வழக்குகளும் உள்ளது.

இவர் இரண்டு முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று வந்துள்ளார்.  இவரை போலீஸார் நிலையம் அழைத்து வந்து  விசாரித்து வந்த நிலையில், மேற்படி நபர் நிலையத்தில் மாட்டியிருந்த டியூப் லைட்டை கழற்றி உடைத்து ஒரு சிறிய துண்டினால்  தனக்குத்தானே கழுத்தில் கீறிக் கொண்டு உங்கள் அனைவரையும் சும்மா விடமாட்டேன் என்று மிரட்டியதாகவும், ஆனால், அவரை மடக்கி பிடித்த போலீசார்,  துரிதமாக செயல்பட்டு அவரிடம் இருந்த டியூப் லைட் துண்டினை பிடுங்கியதுடன் உடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். தற்போது சரவணன் நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சரவணன் நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த உள்ளதாகவும் போலீசார் கூறி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.