பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட்  அணித்தலைவர் சர்பராஸ் அணியில் இருந்தே நீக்கம்

ஸ்லாம்பாத்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி 20  தலைவர் சர்பராஸ் அகமது அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகள் அணியிலும் டி 20 மற்றும் ஒருநாள் அணியிலும் சர்பராஸ் அகமது அணித் தலைவராக உள்ளார்.   இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி எதையும் சாதிக்கவில்லை என்னும் குற்றச்சாட்டு உள்ளது.   உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பேராததில் இருந்தே இவர் மீது அதிருப்தி நிலவி வருகிறது

சமீபத்தில் இலங்கை வீரர்களுடன் நடந்த டி 20 போட்டிகளில் பாகிஸ்தான் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது இவர் மீது மேலும் அதிருப்தியை உண்டாக்கியது.  அத்துடன் டெஸ்ட் தொடரில் தென் ஆப்ரிக்காவிலும் துபாயில் நியுஜிலந்துக்கு எதிராகவும் பாகிஸ்தான் அணி தோல்வி கண்டது.

எனவே பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் மற்றும் டி 20 தலைமையில் இருந்து சர்பராஸ் அகமது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.  அது மட்டுமின்றி இந்த இரு போட்டி அணிகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.   டெஸ்ட் அணித்தலைவராக அசார் அலியும் டி 20 அணியின் தலைவராக பாபர் ஆசமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   தற்போது சர்பராஸ் ஒரு நாள் போட்டி அணியின் தலைவராக மட்டும் உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: captain, Cricket Team, Pakistan, Sarafaraz ahmed, T20, test
-=-