Random image

சாரிடான் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு தடை – மருத்துவ தொழில்நுட்பக் குழு

சாரிடன் உட்பட 328 மருந்துகளுக்கு தடை விதித்து மருத்துவ தொழில்நுட்ப குழு உத்தரவிட்டுள்ளது. சந்தையில் தடை செய்யப்பட்ட மருந்துகள் ரூ.2500 கோடி மதிப்பு கொண்டவை என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளது.

drugs

உச்சநீதிமன்றம் இந்திய சுகாதார அமைச்சத்திற்கு விடுத்த உத்தரவின்படி மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை குழு சாரிடன், கிரீம் பாண்டெர்ம் உள்ளிட்ட 328 மருந்துகளுக்கு தடைவிதித்து அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த மருந்துகளுக்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மேலும் ஒருசில மருந்துகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தலைவலி நிவாரணியான சாரிடான், சரும நோய் நிவாரணி கிரீம் பாண்டெர்ம், சர்க்கரை நோய் காம்பினேஷன் மருந்து குலூகோனாம் பி.ஜி., ஆண்டிபயாடிக் லுபிடிகிளாக்ஸ், பாக்டீரிய எதிர்ப்பு கொண்ட டேக்சிங் ஏ.இசட் உள்ளிட்ட மருந்து உள்ளிட்ட மருந்துகள் தடை விதித்து சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்துள்ளது. இவைகள் பாதுகாப்பற்றவை என மருத்துவ குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட மருந்துகள் சந்தையில் ரூ.2500 கோடி மதிப்பு கொண்டவை. தடை செய்யப்பட்ட ஃபிக்சட் டோஸ் காம்பினேஷன் என்ற FDC மருந்துகள் இந்தியாவின் ஒட்டுமொத்த மருந்துச் சந்தையில் 1.3 ட்ரில்லியன் பங்கு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தடையில் இருந்து டி கோல்டு டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட சளி நிவாரணிகள் தப்பித்தன.