ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து இருப்பதாக காப்பக அதிகாரி தெரிவித்து உள்ளார்.

உலகில் 70% புலிகளின் இருப்பிடமாக இந்தியா உள்ளது. இதன் காரணமாக, இந்திய அரசானதுஅழிந்து போகும் அபாயத்திலுள்ள உயிரினமான (Endangered species) புலிகளை பாதுகாப்பதற்காக 1973-ம் ஆண்டு புலிகள் பாதுகாப்பு திட்டத்தை ஏற்படுத்தியது. . 2006-ம் ஆண்டு 1,411 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2011 இல் 1,706 ஆகவும், 2014 இல் 2,226 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்தியாவின் புலி எண்ணிக்கையில் 35% உள்ள எட்டு மாநிலங்கள் – ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் ராஜஸ்தான் – உள்ளடக்கிய மத்திய மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை நிலப்பரப்பில், 2014 ஆம் ஆண்டில் 688 என்று இருந்த புலிகள் எண்ணிக்கை, 2019 இல் 1,033 ஆக, 50% அதிகரித்துள்ளது.

பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதல, புலிகளின் மனித தொடர்புகள் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக புலிகளின் வசிப்பிடம் பாதிக்கப்படுவது, வேட்டையாடு போன்ற சம்பவங்களால் புலிகள் அழிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது. இதன்காரணாக, புலிகளை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் புலிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறத. அங்கு, தற்போது  புலிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என சரிஸ்கா புலிகள் காப்பக அதிகாரி மீனா தல்வாரிக் தெரிவித்துஉள்ளார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக சரிஸ்கா புலிகள் காப்பகத்தில் உள்ள  ST-14 என்ற பெண் புலி குட்டி  போட்டதாகவும், கடந்த மே மாதம் ST-12 என்ற பெண்புலி 3 குட்டிகளுடன் கேமராவில் பதிவானதாகவும் குறிப்பிட்டவர்,  தற்போது காப்பகத்தில் 6 ஆண் புலிகள், 10 பெண் புலிகள் இருப்பதாக தெரிவித்தார். மேலும்,  புலிகளின் நடமாட்டத்தை தொடர்ந்து  கண்காணித்து வருவதாகவும் தெரிவித்தார்.