சர்க்கார் வழக்கு: உயர்நீதி மன்றத்தில் ஏர்.ஆர்.முருகதாஸ் முறையீடு

சென்னை:

ர்ச்சையை ஏற்படுத்திய சர்க்கார் படம் தொடர்பாக படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முறையிட்டுள்ளார்.  இந்த வழக்கு  இன்று பிற்பகலில் விசாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சர்கார்’. படம்  வெளியாகும் முன்பே திருட்டுக்கதை கதை பிரச்சனையில் சிக்கியது.  அதை யடுத்து படம் வெளியானதும், அதில்,  அரசின் இலவசப் பொருட்களை எரிப்பது போன்ற காட்சி இடம் பெற்றதால் பல எதிர்ப்புகள் கிளம்பியது. அதன் காரணமாக படம் ஓடுவது அதிமுகவின ரால் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர்  சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு படம் வெளியானது.

இந்த நிலையில், சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் முருகதாசுக்கு எதிராக  காவல் நிலையத் தில் புகார் அளித்தார். அதில்,  அரசின் இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக  தெரிவித்திருந்தார்.  அவரது புகாரின்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் முருகதாசுக்கு எதிராக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.