சர்க்கார் சர்ச்சை: அனுமதிக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் நீக்குவதற்கு சென்சார் எதற்கு? பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:

டிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியாகி உள்ள சர்க்கார் படம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வந்த நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டன.

இந்த நிலையில், காட்சிகள் நீக்கப்பட்டதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே சென்சார் அனுமதித்த நிலையில் மீண்டும் காட்சிகளை நீக்க சென்சார் எதற்கு என்று கேள்வி விடுத்துள்ளார்.

விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படத்தில் இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் அரசு மற்றும் முன்னாள் முதல்வர் ஜெ கறித்து இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் திரையரங்குகள் முன் போராட்டம் வெடிக்கும் என அதிமுகவினர் மற்றும் தமிழக அரசு எச்சரித்ததால் வேறு வழியின்றி படக்குழு ஒருசில காட்சிகளை நீக்க சம்மதித்தது.

அதைத்தொடர்ந்து நேற்று மறுதணிக்கை செய்யப்பட்டு  நேற்று மாலை காட்சி முதல் புதிய பொலிவுடன் ‘சர்கார்’ அனைத்து திரையரங்குகளில் ஓடி வருகின்றது.

இந்த நிலையில் தணிக்கை செய்யப்பட்ட ஒரு படத்தின் காட்சிகளை நீக்க சொல்வது அநீதியானது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், ‘சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும் என்றும், ஒரு படம் தணிக்கை செய்யப்பட்டு வெளியான நிலையில் சில காட்சிகளை நீக்க கோருவது வேதனை என்றும், சென்சார் செய்யப் பட்ட படம் வெளியே வந்த பிறகு மீண்டும் காட்சிகளை நீக்குவதற்கு சென்சார் எதற்கு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தற்போது தமிழகத்தில் டெங்குகாய்ச்சல் அதிகமாக பரவி வருகின்றது. தீபாவளி தினத்தன்று அதிகாலையில் பட்டாசு வெடித்திருந்தால் கொசுக்கள் அனைத்தும் அழிக்க ஒரு வாய்ப்பாக இருந்திருக்கும் என்றும் பிரேமலதா கூறினார்.

ஜெயலலிதா மறைவுக்க  பின்னர் அதிமுக ஐந்து துண்டாக உடைந்துவிட்டதாகவும், ஆர்.கே.நகர் தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக, தனது வாக்கு சதவிகிதத்தை இழந்துவிட்டதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.