சர்கார் பட விவகாரம்: விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை

ர்கார் படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் அடுத்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக  அமைச்சர் கடம்பூர் ராஜூ நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளி நாளான நேற்று  சர்கார் திரைப்படம் வெளியாகி உள்ளது.

அரசியல் படமான இதில் முதல்வர், ஆளும்கட்சியை கடுமையாக விமர்சித்து காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வில்லி கதாபாத்திரத்துக்கு முன்னாள் முதல்வர் ஜெயல்லிதாவின் இயற்பெயரான கோமலவள்ளி என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதனால் ஆளும் அ.தி.மு.க. தரப்பில் பலரும் சர்கார்  படத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு, “சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாக தகவல் வந்துள்ளது. சில காட்சிகள் படத்திற்காக இல்லாமல் அரசியலுக்காக வைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளது வளர்ந்து வரும் நடிகரான விஜய் இது போன்று நடித்திருப்பது நல்லதல்ல.

அரசின் விலையில்லா பொருட்களை எரிப்பது போன்ற காட்சி இருப்பதாக சொல்கிறார்கள். இது போன்ற காட்சிகளை அவர்களாகவே நீக்கினால் நல்லது, இல்லையெனில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்து பேசி அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், சர்கார் படத்துக்கு அதிக விலையில் திரையங்குக்களில் கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாக புகார் எழுந்த்து. இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொது நல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது கடம்பூர்ராஜு, “பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ என்ற காரணம் காட்டி தீபாவளிக்கு வெளியாகும் யார் திரைப்படமாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அந்த திரையரங்கு உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசும் அறிவித்துள்ளது. நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. அப்படி வசூலிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்த்து குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published.