சர்கார் கதைத் திருட்டு புகார்ச விளக்கம் கொடுத்த  ஏ.ஆர்.முருகதாஸ்!

திருவிளையாடல் பாணியில், “சேர்ந்தே இருப்பது எது” என்றால் கண்களை மூடிக்கொண்டு, “ஏ.ஆர். முருகதாசும் கதைத் திருட்டு புகாரும்” என்று சொல்லலாம் போல!

2004ஆம் ஆண்டு இவரது இயக்கத்தில் வெளியான கஜினி படம், 2000ல் வெளியான கிறிஸ்டோபர் நோலனின் மெமெண்டோ என்ற ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காப்பி என்று விமர்சனம் எழுந்தது.

அடுத்து இவர் விஜய்யை வைத்து இயக்கிய கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று இயக்குநர் கோபி நயினார் வழக்கே தொடுத்தார். பிறகு இந்த பஞ்சாயத்து நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்கப்பட்டது.

தற்போது அதே விஜய்யை வைத்து இவர் இயக்கும் சர்கார் படத்தின் கதையும் திருட்டு புகாரில் சிக்கியிருக்கிறது.

இந்த நிலையில் எழுத்தாளரும், துணை இயக்குநருமான  வருண் ராஜேந்திரன்,  சர்கார் படத்தின் கதை தன்னுடையது என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.

அதில், “நான் செங்கோல் என்ற தலைப்பில் கைதை எழுதி அதை  எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். முன்னதாக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இக்கதையை கூறினேன். அதற்கு கண்டிப்பாக விஜய் நல்ல செய்தி கூறுவார் என்று உறுதியளித்தார். ஆனால் தற்போது அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.  ஆனால் அதே கதையை தற்போது விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இரு தரப்பையும் விசாரித்தார் எழுத்தாளர் சங்க தலைவர் பாக்யராஜ்.

ஏ.ஆர். முருகதாஸ், “படம் எடுத்தால் நான்கு பேர் தன்னுடைய கதை என்று வருவார்கள். தனது ஓட்டை வேறு யாரோ கள்ள ஓட்டுப் போட்டுவிட்டார்கள் என்று குமுறும் நாயகன், அடுத்து என்ன செய்கிறான் என்பதுதான் ஒன் லைன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன்  ஓட்டையே கள்ள ஓட்டுப் போட்டதாக செய்தி வந்தது. அதை வைத்துத்தான் நான் சர்கார் கதையை உருவாக்கினேன்” என்று சொல்லியிருக்கிறாராம்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Sarkar; plagiarism-charges-against-a-r-murugadoss-once-again: -murugadoss-explains
-=-