கீதா கோவிந்தம் பட இயக்குனர் பரசுராம் உடன் தனது 37ஆவது படத்தில் நடிக்கிறார்.தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு .

இந்த படத்தை மகேஷ் பாபுவின் GMB ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு ‘சரக்கு வாரி பாட்டா’ என டைட்டில் வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நிவேதா தாமஸ் நடிக்கிறார்.

இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடும் மகேஷ்பாபுவிற்கு ரசிகர்களிடமிருந்தும், பிரபலன்களிடமிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது அவர் நடிக்கவுள்ள ‘சரக்கு வாரி பாட்டா’ படக்குழுவினர் இவருக்கு பிறந்தநாள் பரிசாக மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இந்த மாஸான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.