புனே: இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட், பிரதான அறிவியல்&தொழில்நுட்ப நிறுவனமான மெர்க் மற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனமான ஐஏவிஐ உடன் இணைந்து, SARS-CoV-2 உற்பத்திக்கான ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்த SARS-CoV-2 என்பது ஒரு மோனோகுளோனல் ஆன்டிபாடிகளாகும். இது, கோவிட்-19 வைரஸை எதிர்த்துப் போராடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டிபாடிகளை உலகெங்கிலும் விரைந்து கிடைக்கச் செய்வதற்காகவே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஐஏவிஐ மற்றும் ஸ்கிரிப்ஸ் ரிசர்ச் ஆகியவை ஆராய்ச்சியில் இணைந்து கண்டுபிடித்த மோனோகுளோனல் ஆண்டிபாடிகளான SARS-CoV-2 ஐ, கொரோனா தாக்கத்தை எதிர்கொள்வதற்காக விரைந்து கிடைக்கச் செய்வதற்கு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளில், SARS-CoV-2 ஆன்டிபாடிகளை கிடைக்கச் செய்யும் பணியை சீரம் நிறுவனம் முன்னெடுக்கும். அதேசமயம், வளர்ந்த நாடுகளில் இதை சந்தைப்படுத்தும் பொறுப்பை மெர்க் மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது குறித்து, சீரம் நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஆதார் பூனவல்லா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.