பிப்ரவரி 1ந்தேதி வெளியாகிறது ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாள மயம்’

ராஜீவ்மேனன்  இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வம் தாளமயம்’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ந்தேதி படம் வெளியாவதாக ராஜீவ் மேனர் டிவிட்டர் இணையதளத்தில் அதிகாரப்பூர்வமாக பதிந்துள்ளார்.

ராஜீவ் மேனனின் மைன்ட் ஸ்கிரின் (MINDSCREEN)  நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில்,  ஜீ.வி.பிரகாஷ் உடன்  நெடுமுடி வேணு, வினித், டிடி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

படத்தன் பாடல்கள், டிரெயிலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் 28ந்தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், பிப்ரவரி 1ந்தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி