சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று மரணம் அடைந்தார்

சென்னை

பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் உரிமையாளர் இன்று மரணம் அடைந்தார்.

தன்னுடைய உணவு விடுதியின் மேலாளர் மகள் ஜீவஜோதி.  இவரை மூன்றாவது மனைவியாக்க ராஜகோபால் விரும்பினார்.  அதற்கு ஒப்புக் கொள்ளாத ஜீவஜோதியின் கணவர் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கொலை செய்ததாக சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

ஜீவஜோதி

இந்த தீர்ப்பை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் அளித்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது.   அவர் உடல் நிலை சீர் கெட்டு இருந்ததால் அவர் கால அவகாசம் கோரினார்.  கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை ஒட்டி அவர் சரண் அடைந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

படுத்த படுக்கையாக சரண அடைந்த ராஜகோபாலில்  உடல்நலம் மேலும் சீர் கெட்டதால்  சிறையில் இருந்து சென்னை ஸ்டால்ன்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருடைய குடும்பத்தினர் அவரை நீதிமன்ற அனுமதியுடன் தனியார் மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.

இன்று காலை தனியார் மருத்துவமனையில் ராஜகோபால் மரணம் அடைந்தார்.   அவருடைய இறுதிச் சடங்குகள் அவரது சொந்த ஊரில் நடைபெறும் என தெரிய வந்துள்ளது.