பிரதமர் குறித்த புத்தகத்துக்கு புதிய வார்த்தை அளித்த சசி தரூர்

டில்லி

பிரதமர் மோடி குறித்து தாம் எழுதிய புத்தகத்தை குறித்த விளக்கமாக 29 ஆங்கில எழுத்துக்கள் கொண்ட புதிய வார்த்தை ஒன்றை காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.

தி பாரடாக்சிகல் பிரைம் மினிஸ்டர் (The paradoxical Prime Minister) என்னும் பெயர் கொண்ட இந்த ஆங்கில புத்தகத்தை. காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் எழுதி உள்ளார். விரைவில் வெளி வர உள்ள அந்த புத்தகத்தை குறித்த விளக்கமாக 29 ஆங்கில எழுத்துக்கள் கொண்ட ஒரு புதிய ஆங்கில வார்த்தையை வெளியிட்டுள்ளார்.

புகழ்பெற்ற மதாம் துசாட் மெழுகு சிலை கண்காட்சியில் மோடியில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. கைகளை கட்டியபடி அந்த சிலையை மோடி பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படம் இந்த புத்தக அட்டையில் இடம் பெற்றுள்ளது. இந்த புத்தகம் குறித்து சசி தரூர் இந்த புகைப்படத்துடன் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் ”இந்த புத்தகம் ’ஒரு பொருளை அல்லது பழக்கத்தை மதிப்பற்றது என மதிப்பிடுதல்’ பற்றிய புத்தகமாகும்” என தெரிவித்துள்ளார். இந்த பொருள் தரும் புதிய வார்த்தையாக அவர் floccinaucinihilipilification உபயோகப்படுத்தி உள்ளார். இந்த புதிய வார்த்தை டிவிட்டரில் பலரையும் ஈர்த்துள்ளது. பலரால் சுலபமாக உச்சரிக்க முடியாத வார்த்தையான இதைக் குறித்து பலரும் சசி தரூரை பாராட்டி உள்ளனர்.