சென்னை,

சிகலாவுக்கு எதிராக உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளதை தொடர்ந்து அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.

முதல்வர் ஓபிஎஸ் இன்று கூவத்தூர் சென்று எம்எல்ஏக்களை சந்திக்க இருப்பதாக கூறி உள்ளார். மேலும் அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் வெளியேற வசதியாக இரண்டு பேருந்துங்களும் நிற்க வைக்கப்பட்டு உள்ளன. போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலையில் கூவத்தூரில் தங்கியுள்ள எம்எல்ஏக்களுடன் சசிகலா ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து சட்டமன்ற கட்சி தலைவராக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவரே முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

அதைத்தொடர்ந்து முதல்வர் ஓபிஎஸ்-ஐ கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் ஓபிஎஸ்-சுக்கு ஆதரவளித்து வரும் 10 சட்டமன்ற உறுப்பினர்களையும் நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.