அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா திடீர் அறிவிப்பு: ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பதாக பரபரப்பு அறிக்கை

சென்னை: அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சித் தொடர தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி தீயசக்தி என்று நமக்கு ஜெயலலிதா காட்டிய திமுகவை ஆட்சியில் அமர விடாமல் தடுத்து விவேகமாக இருந்து பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபடவேண்டும்.

என்மீது அன்பும், அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களுக்கும், நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.நான் அரசியலை விட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிராத்திப்பேன் எனத் தெரிவித்துள்ளார். சசிகலாவின் இந்த அறிக்கை தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.