சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா உறுதி செய்யப்பட்டதால் தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

இதுகுறித்த தேர்தல் ஆணையத்தின் அறிக்கையில், வருமானவரித்துறை கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில் தேர்தலை ரத்து செய்துள்ளது என்றும்,  மீண்டும் தேர்தல் தேதி எப்போது நடைபெறும் என்று குறிப்பிட வில்லை. ஆனால்,   தேர்தல் நடத்துவதற்கு நியாயமான சூழல் வரும்போது  தேர்தல் நடக்கும் என்று மட்டும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

இதன் காரணமாக ஆர்.கே. நகரில் மீண்டும் எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அதிமுகவில் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத்தொடர்ந்த ஏற்பட்ட உள்கட்சி பூசல் காரணமாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், சசிகலாவை எதிர்த்து தனி அணியாக  உள்ளார்.

அதைத்தொடர்ந்த சசிகலா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும், அதிமுக விதிகளில் தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவி இல்லை என்றும், அதன் காரணமாக அவரது பதவி செல்லாது என்றும் தலைமை தேர்தல் கமிஷனில்  புகார் கூறினர்.

இதுகுறித்து இரு அணிகளும் புகார் கூறியதை தொடர்ந்து அதிமுகவின் பெயரையும், இரட்டை இலை சின்னத்தை யும் தேர்தல் கமிஷன் முடக்கி வைத்தது.

இந்நிலையில் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  தகுந்த சூழல் வரும்போது மீண்டும் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

எனவே,  சசிகலா, அதிமுக பொதுச்செயலாளராக  நியமிக்கப்பட்டது தொடர்பான விவகாரத்தில் இறுதி முடிவெடுத்த பின்னர் தான் ஆர்கேநகர் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக டில்லியில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.