பரோலில் வருகிறார் சசிகலா ?

பெங்களூர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, கடந்த சில நாட்களுக்கு முன் பரோல் விண்ணப்பித்ததாகவும், விண்ணப்பம் ஏற்கப்பட்டால் 30 நாட்கள் பரோலில் வருவார் என்றும் தகவல் பரவின.

திவாகரன் மகன் ஜெய் ஆனந்தின் திருமணத்திற்காக கோரியதாகவும் பேசப்பட்டது.

இது குறித்த தகவல் சமூகவலைதளங்களில் பரவியது. சில தொ.காட்சிகளிலும் இது குறித்து செய்தியாக வெளியானது.

ஆனால், சட்டப்படி சசிகலாவுக்கு தற்போது பரோல் கிடைக்க வாய்ப்பில்லை என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே 10 நாட்கள் பரோல் கேட்டு சிறைத்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளதா கவும் செய்தி வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.