பெங்களூரு:

சிகலா அடைக்கப்பட்டிருக்கும் பெங்களூரு பரப்பன அக்ரஹார  சிறை கண்காணிப்பாளர் நேற்று நள்ளிரவில் அதிரடியாக மாற்ற கர்நாடக அரசால் மாற்றம் செய்யப்பட்டார்.

சசிகலா சாதாரண உடையில்  சிறையில் இருந்து வெளியே சென்று வந்ததாக கூறப்பட்ட நிலை யில், புதிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக பெங்களூரு சிறை  தலைமை கண்காணிப்பாளர் நிகாம் அம்ரித்  மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2 மாதத்தில் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் மாற்றப்படுவது 6 வது முறை என்று கூறப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரபப்பன அஹ்ரஹார சிறையில் சசிகலா, சிறைத்துறை அதிகாரிகளுக்கு கோடிகணக்கில் பணம் கொடுத்து உல்லாசமாக வாழ்ந்து வருவதாக முன்னாள் சிறைத்துறை டிஐஜி புகார் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து கர்நாடக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஏற்கனவே சசிகலா, சிறையைவிட்டு வெளியே சென்றதற்கான ஆதாரமாக வீடியோவை டிஐஜி ரூபா வெளியிட்டிருந்த நிலையில், நேற்று புதிய வீடியோ ஒன்று   சசிகலா கையில் பையுடன் வெளியே சென்று வந்தது போல்  வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்த வீடியோ வெளியானது எப்படி என விசாரிக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து,  சிறை கண்காணிப்பாளர் நிகாம் அம்ரித்  நேற்று நள்ளிரவில் மாற்றப்பட்டார்.

சசிகால கடந்த ஜூன் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அது முதல் தற்போது வரை சிறை கண்காணிப்பாளர்கள் 6வது முறையாக மாற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.