மிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பு வகித்த1991 – 1996  ஆண்டு காலகட்டத்தில் அவரும் அவரது தோழி சிசகலா உள்ளிட்டோரும் வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அடுத்து வந்த தி.மு.க. ஆட்சியில், இது குறித்து வழக்கு தொடரப்பட்டது.

பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு, கர்நாடகா தனி நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரை குற்றவாளி என அறிவித்து தண்டனை அளித்தது. பிறகு இவர்கள் கர்நாடக உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அங்கு  இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. விசாரணைக்குப் பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது.

இதில்ர சசிகலாவை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் ஜெயலலிதா சசிகலாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றம் (குமாரசாமி ) தீர்ப்பை  ரத்து செய்துவிட்டது.

கீழ் நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா பத்து கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.    பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் 48-வது அறையில் இருக்கும் நீதிபதி அசோக் நாராயணாவின் முன்பாக சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் சரணடையுமாறும் உத்தரவிட்டுள்ளது.

ஆகவே சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.