பெங்களூர்,

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாக, சிறையினுள் விதவிதமான உடைகளுடன் உல்லாசமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தாக டிஐஜி ரூபாய் பரபரப்பு தகவல்களை வெளியிட்டு உள்ளார்.

பெங்களூர் சிறையில் நடைபெற்று வரும் முறைகேடுகளை கண்டுபிடிக்க தான் 4 முறை முயன்றதாகவும், ஆனால் அதுகுறித்த தகவல்கள் சிறைக்கு கசிந்து விடுவதால் சோதனை நடத்த முடியவில்லை என்றும், ஆனால், சமீபத்தில் திடீரென நடத்தி சோதனையின்போதுதான், சசிகலா சிறையினுள் வாழ்ந்த உல்லாச வாழ்க்கை தனக்கு தெரிய வந்தது என்று தெரிவித்து உள்ளார்.

சிறையில் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ள ரூபாய  சிறையில் நடந்த முறைகேடுகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கும், அரசுக்கும் நான் அறிக்கை கொடுத்திருக்கிறேன்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகேடுகள் அனைத்தும் உண்மை என்றார்.

ஏற்கனவே கைதிகள் நிரம்பி வழியும் அந்த சிறையில், சசிகலாவுக்கு சிறைக்குள் 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இது தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியத என்று கூறியுள்ள அவர்,  அந்த அறைகளில் எல்இடி டிவி, படுக்கை வசதிகள்  அதோடு சமையலுக்கு தேவையான  குக்குர், காபி மேக்கர், சூப் செய்ய தேவையான பொருட்கள்  அனைத்தும் இருந்ததாகவும்,

ஒரு வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருந்தன. பிரியாணி செய்வதற்கான பொருட்கள் இருந்தன என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்துள்ளார்.

மேலும்,  2வது அறையில் ஏராளமான சுடிதார், புடவைகள், நைட்டிகள் இருந்தன. இதன் காரணமாக அவர் சிறையினுள் இருக்கும்போதும், சிறையில் இருந்து திருட்டுத்தனமாக வெளியே செல்லும்போதும்,  விதவிதமான உடைகள் அணிந்து, உல்லாசமாக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளது தெரிய வந்தது என்று கூறியுள்ள ரூபாய,  சிறையில் கைதிகளுக்கு கொடுக்கும் உடையை சசிகலா  ஒரு முறை கூட பயன்படுத்தவில்லை என்று கூறினார்.

சிறையில் அணிய சசிகலாவுக்கு நாங்கள் கொடுத்த உடை, கொடுத்தபோது எப்படி மடித்து இருந்ததோ, அது அப்படியே இருந்தது.

3வது அறையை சசிகலா யோகா, உடற்பயிற்சி செய்ய உபயோகப்படுத்தி வந்துள்ளார்.

4வது அறையில், பார்வையாளர்களை சந்திக்கும் வகையில், அறையினுள் அதிகாரிகள் பயன்படுத்தும்  சோபா, சேர் இருந்தன. இந்த அறையை சிறை அதிகாரிகள் பயன்படுத்துவர். ஆனால், அந்த அறையை சசிகலாதான் பார்வையாளர்களை சந்திக்க பயன்படுத்த அனுமதித்துள்ளனர் என்றார்.

மேலும்,  சசிகலா தனது உடல் உபாதைகளுக்காக எடுத்துக்கொள்ளும் மருத்து, மாத்திரைகள் அனைத்தும் வெளியில் இருந்துதான் வந்தன.

ஆனால் கைதிகளுக்கு தேவையான மருந்துகளை சிறைக்குள்ளேயே வாங்க முடியும். வேண்டு மென்றால்  மருத்துவர்கள் உதவியுடன் வெளியில் இருந்து சிறைத்துறையே வாங்கித் தரும் வசிதி உள்ளது. ஆனால், சசிகலாவுக்கு தேவையான மருந்துகள் அனைத்தும் வெளியில் இருந்தே வந்துள்ளன .