சசிகலா குடும்பம் ஒதுக்கப்பட்டது முதல்வெற்றி! ஓபிஎஸ்

--

சென்னை,

திமுக அம்மா அணியில் இருந்து சசிகலா குடும்பம் ஒதுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது தங்களது அணிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

திமுகவில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பம் காரணமாக இரு அணிகளும் இணைய பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பம் விலக்கி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது,   தங்களது தர்மயுத்தத்திற்கு கிடைத்த முதல் வெற்றி என்று கூறினார்.

தொண்டர்களின் விருப்பதை நிறைவேற்ற இரு தரப்பும் பேசி முடிவெடுப்போம் என்றும் கூறினார்.