சசிகலா பொ.செ. ஆக முன்மொழிந்தவர்கள் யார் யார்?

--

சென்னை,

றைந்த அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை, அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்ய கட்சி நிர்வாகிகள் சிலர் பொதுக்குழுவில் முன்மொழிந்தனர்.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, முதல்வராக ஓ.பி.எஸ். பொறுப்பேற்றுக்கொண்டார். கட்சியின் பொதுச்செயலாளர் ஆகப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில் இன்று கூடிய அதிமுக பொதுக்குழு, வி.கே சசிகலாவை பொ.செ.வாக தேர்ந்தெடுப்பதாக தீர்மானம் நிறைவேற்றியது.

சசிகலாவை பொ.செ.வாக ஆக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தவர்கள், , விருதுநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி, விழுப்புரம் மாவட்ட செயலாளர் குமரகுரு, பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், கிரிஷ்ணகிரி மாவட்ட செயலாளர் வி.கோவிந்தராஜ், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பாப்புலர் வி.முத்தையா ஆகியோர் ஆவர்.

இந்த தீர்மானத்தை பொதுக்குழு ஏகமனதாக நிறைவேற்றியது.

Also read

You may have missed