சசி நீக்கம்: அதிமுக தீர்மானம்! பா.ஜ. வரவேற்பு

கோவில்பட்டி,

திமுக பொதுக்குழு கூட்ட தீர்மானங்களை பாஜக வரவேற்கிறது என்று தமிழக பாரதியஜனதா கட்சியின் முன்னாள் தலைவர்  இல. கணேசன் எம்பி  கூறி உள்ளார்.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில், கோவில்பட்டியில் செய்தியளார்களுக்கு பேட்டி அளித்த இல.கணேசன் எம்.பி. அதிமுகவின் தீர்மானங்களை வரவேற்பதாக கூறினார்.

மேலும்,. அதிமுகவை பிளவுபடுத்த நினைக்கும் தினகரன் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும்,  அதிமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லாத தினகரன் கட்சி  உரிமை கோருவது தவறு என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும் நீட் தேர்வுக்கு ஆதரவாக கருத்து கூறிய கணேசன்,  நீட் தேர்வை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட  அரியலூர் மாணவிஅனிதா மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்