பெங்களுரூ:
சிகலாவின் உடலில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதாக பெங்களுரூ விக்டோரியா மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது தண்டனைக் காலம் இன்னும் சில தினங்களில் முடிவடையவுள்ளது.

ஜனவரி 27ஆம் தேதியன்று சசிகலா சிறையில் இருந்து வெளிவரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் காரணமாக அவர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்ததில் நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை இன்று இரவு 8 மணியளவில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா அறிகுறிகள் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், உடலில் ஆக்சிஜன் அளவு 97% ஆக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் இயல்பாக உணவு எடுத்துக்கொள்வதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.