பெங்களூரு: கொரோனா தொற்று காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலாவின் உடல்நிலை நார்மலாக இருப்பதாகல், அவரை சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், சசிகலா விடுதலையாவதும் தள்ளிப்போகும் என கூறப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில்தான் சசிகலா சிறையில் இருந்து  விடுதலையாகி தமிழகம் திரும்புவார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா, தண்டனை முடிந்து வரும் 27ந்தேதி விடுதலை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், சிறையில் சசிகலாவுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது.  அங்கு, சசிகலாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தீவிர தொற்றால், அவர் உடடினயாக பெங்களூரில் உள்ள  விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனாவும் உறுதியனது. இதனால் ஒருவாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளார்.

இந்த நிலையில், தற்போது,   சசிகலா உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், சசிகலா அவருக்கு உரிய உணவை தாமே உட்கொள்வதாகவும்,  உடல்நிலை சீராக உள்ளது என்றும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், சசிகலாவிற்கு கொடுக்கப்படும் ஆக்சிஜன் அளவு 3 லிட்டராக குறைக்கப்பட்டுள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்துள்ளதால் சசிகலாவுக்கு இன்சுலின் மருந்து செலுத்தப்படுகிறது.  அவரின், நாடித்துடிப்பு, ரத்த அழுத்தம் மற்றும் சுவாசிக்கும் திறன் சீராக உள்ளது இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் சசிகலாவை சாதாரண வார்டுக்கு மாற்ற மருத்துவமனையை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கொரோனா தொற்று  காரணமாக சசிகலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர்  27ந்தேதி விடுதலை செய்யப்படுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் பிப்ரவரி மாதம்தான் விடுதலை செய்யப்பட வாயப்பு உள்ளதாகவும்,   பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணா நினைவு நாளான பிப்ரவரி 3-ஆம் தேதி பெங்களுருவில் இருந்து சசிகலா சென்னை வரவுள்ளதாக கூறப்படுகிறது. தமிழகம் வரும் சசிகலா மெரினாவில் உள்ள  ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஅஞ்சலி செலுத்துவார் என்றும், அதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் சென்று, அங்குள்ள தனது கணவர்  நடராஜன் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தவும்  திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.